Tuesday, July 8, 2014

வெள்ளையானை வாசித்த அனுபவம்

இந்நூலின் உள்ளடக்கம்:
இது ஒரு வரலாற்றுப்புனைவு. ஒரு மனிதாபிமான இங்கிலாந்து காவல்துறை வீரனின் பார்வையில், இந்தியாவில் நடந்த ஒரு வேலை நிறுத்தப்போராட்டம் எவ்வாறு நடந்நது , அதனின் வேர் என்ன என்பதை விளக்குகிறது.
இந்த நூலின் சிறப்புகளாக நான் கருதுவது:
அ. படித்து முடித்த பின் ஒரு நல்ல திரைப்படம் கண்ட ஓர் மன நிறைவு கிடைத்த்து. அந்த அளவு நேர்த்தியான நடை.  என் நினைவில்  இருக்கும் உணர்வுகளில் காமம் தவிர அனைத்தையும்   வெளிப்படுத்தும் அளவு இதில் பொருள் உள்ளது.
ஆ. நம்முடைய மனசாட்சியை உலுக்கும் அளவுக்கும் , அதனுடன் உரையாடும் அளவுக்கு இதில் உள்ள உரையாடல்களும், ஆசிரியரின் விளக்கங்களும் உள்ளன.
இ. விடுதலைக்கு முற்பட்ட காலங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. எனக்கு அதைப்பற்றி அறியும் ஆவல் இருந்ததால் மிகப் பிடித்திருந்தது.
உ. மனிதாபிமான உணர்ச்சிகளை கட்டாயம் தூண்டும்.
ஊ. (வாசிப்பவர்)தன்னை, தான் நம்பும் எண்ணவுருவங்களை நோக்கிய கேள்விகளை,  எய்த துணைபுரியலாம்.
எ. மதமாற்றங்கள் நடந்த்தற்கான சில காரணங்களை உணர்வோம்.
ஏ. தன் சாதி, தன் மத  சார்ந்த அதிதீவிர பற்றுள்ளவர்களுக்கு(இவ்வாறு ஆகும் போது மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் எனும் எண்ணம்  அல்லது வெறுப்பு இயல்பாக எழும்) அவ்வாறு இருப்பதினால் மனிதாபிமானம் எவ்வாறு சாகின்றது என்பது புலப்படலாம்.
உ. பஞ்சத்தின் உக்கிரங்களை நமக்கு உணர்த்தும்.
ஊ. மனித இனம் எவ்வளவு மோசமான சுரண்டல்களை மேற்கொள்ளும், அச்சுரண்டல்களுக்கும் ஆபத்திற்கு நடுவிலும் எவ்வாறு தன்னலமற்றவர்கள் உருவாகிறார்கள் என்பதை சுட்டும்.
இதை வாசிக்கும் அன்பர்கள் அனைவரும், இந்த நூலை வாழ்வில் ஒருமுறையேனும் வாய்ப்பு அமைந்தால் படித்துப்பார்க்கவும்.

எனக்குப்பிடித்த சில வாக்கியங்கள் பத்திகள்;
1. சாவதற்கு நாங்கள் எப்போது வாழ்ந்தோம்؟
2.ஆட்சி என்பது என்ன؟அது மேலோட்டமாக எவ்வளவுதான் சமத்துவம், நீதி, கருணை என்றெல்லாம பேசினாலும உள்ளே இருப்பது சுரண்டல்தான்.
3.உலகம முழுக்க இப்படித்தான். சுரண்டப்படும் மக்கள்தான் இழிவுபடுத்தப்பட்டு வெறுக்கப்படுகிறார்கள். அது நிகழாத தேசமே இல்லை. அது நிகழவில்லை என்றால் ஒருவேளை தேசங்களே உருவாகியிருக்காது. இந்த தேசத்தில் தீண்டப்படாத மக்கள் இத்தனை தூரம் வெறுக்கப்படுகிறார்கள் என்றால் அதற்குக்காரணம் அவர்கள்தான் இங்கே மிகப்பெரும்பான்மையினராக இருந்தார்கள். இந்த மண்ணே இவர்களுக்குத்தான சொந்தம். அவர்களை அடக்கிச்சுரண்டித்தான் இந்த நாடு உருவாகியிருக்கிறது. ஆகவே அவர்களை இவர்கள் மனமார வெறுத்தாக வேண்டும். வேறு வழியே இல்லை.
4.இங்கே வரும் அதிகாரிகளில் பெரும்பாலும் எல்லாரும் எங்கள் நாடுகளில் சாதரண தொழிலாளர்களின் பிள்ளைகள். குதிரை ஓட்டியும் , மண் சுமந்தும், கரி வெட்டியும் வாழ்ந்தவர்கள். அந்த பாவனைகளையும் மனநிலைகளையும் கழுவிக்கழைந்து அவன் தன்னை ஒரு பிரபுவாக உணரச்செய்வதர்குத்தான் பயிற்சி கொடுக்கிறார்கள். பயிற்சியின் முதல்வரியே நாம் வெள்ளையர்கள் என்றுதான். பின்னர் பல்லாயிரம் முறை அது சொல்லப்படும். அந்த வரி மூச்சுக்காற்றில் கலந்துவிடும். அது உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும்.
5.இன்னும் சில வருடங்களில் அவர்கள் சிறந்த மாலுமிகளாக ஆவார்கள். அவர்களுக்குப்பிறக்கும் குழந்தைகள் சுதந்திரமானவர்களாக வளர்வார்கள். நல்ல சாப்பாடும் வீடும் கல்வியம் அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் நல்லஅறிஞர்களாகவும் கவிஞர்களாகவும் வரலாம். வியாபாரம் செய்து பணம் ஈட்டி பங்களாக்களில் வாழலாம். இந்த பூமியில் உள்ள மற்ற மனிதர்களைப்போல எங்களுக்கும் எதிர்காலம் என்று ஒன்று உள்ளது.
6.உலகம் முழுக்க நான் பஞ்சங்களைப் பார்த்துவிட்டேன். எந்தப் பஞ்சத்திலும் சாகும் மனிதனுக்கு வாழும் மனிதன் உதவி செய்வதில்லை. பஞ்சத்தில் ஒருவன் சாவதைக்கண்டதும் மற்ற அத்தனை பேரும் பதற்றமாகிவிடுகிறார்கள். அந்த நிலை தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறார்கள். அதுவரை கொஞ்சமேனும் இருந்த கொடைப்பண்பும் மறைந்துவிடும். மனிகர்களின் இயல்பான சுயநலம் கிளம்பிவரும். கொஞ்சநஞ்சம் கிடைத்துக்கொண்டிருக்கும் உணவு முழுக்க களஞ்சியங்களில் பதுங்கும். அவற்றில் பெரும்பகுதி எலிகள் தின்றும் மட்கியம் வீணாகும். எங்கும் எப்போதும் மனிதர்கள் இப்படித்தான்.

http://teabench.wordpress.com/

No comments:

Post a Comment