Tuesday, July 8, 2014

ராஜேஷ் தேவநாதன் விமர்சனம்

வெள்ளையானை
ஐஸ்ஹவுஸ் எதிர்புறம் இருக்கும் துரித உணவகத்தில் எப்போதும் சாப்பிடுவேன். அந்த ஒடிசா பையனின் கனிந்த முகம் திரும்பவும் நம்மை அங்கே கொண்டு வரும்.உணவோட சுவையும் சேர்த்துத்தான்!. சாப்பிடும் போது எதிரிலே சாதாரணமா பார்த்த ஐஸ்ஹவுஸ் கட்டிடம் தான். வெள்ளையானை படிக்கும் போது பிரமிப்பையும் சோகத்தையும் பல மடங்காக்கியது.
பதினோறாம் வகுப்பு படிக்கும் போது விவேகானந்தர் இல்லத்தை சுத்தம் செய்ய நாட்டு நலப்பணி மாணவர்களின் சேவையை இராமகிருஷ்ண மடத்தினர் பள்ளிகளின் வாயிலாக அணுகினர்.முதன்முறையாக புதுப்பிக்கப்படாத விவேகானந்தர் இல்லம் என்ற ஐஸ்ஹவுஸை சுத்தம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதுக்கும் குறையாத பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன்.
வெளிப்புற கதவை நாங்கள் கடந்து உள்ளே நுழைந்த போது கட்டாயம் சவரியும் அவன் மனைவியும் கதறியது கேட்டிருக்கும்!.
புதரும் செடிகளும் அடர்ந்த வெளிப்பகுதி எங்களால் சுத்தம் செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் கேப்டன் ஹேடனின் கட்டளைப்படி அவில்தார் நாராயணன் தலைமையிலான ஒரு பிளட்டூன் 20 குதிரைகள் அடங்கிய குதிரைப்படை அங்கே நின்று இடத்தையும் நாங்கள் கடந்தே வந்திருப்போம்.
கருமையடைந்த உள்பக்க அறைகள் பிரமாண்டமாக இருந்தன. மரப்படிகள் அறைகளை இணைத்திருந்தது. சில அறைகளை ரகசிய பாதைகள் இணைத்திருந்தன. கட்டாயம் அப்போது கொலையாளி நீலமேகத்தை தேடி அலைந்த ஹேடனின் காலடிதடங்கள் ஒசைகளை கவனிக்காமல் விட்டிருப்போம்!.
கட்டிடத்தின் உள்புறம் வேலை செய்யும் போது மாணவர்கள் என்னோடு சேர்த்து யாருமே சோர்வடையவில்லை அப்போது கடும் பஞ்சத்தில் உணவுக்காக மட்டுமே போராடிய உடலெங்கும் பூஞ்சைபிடித்து குளிரால் நடுங்கி கால் கைகள் வெடிப்புற பனிக்கட்டியில் தொய்வுற்ற அந்த கருமைநிற தமிழர்களின் ஆன்மாவும் எங்களோடு இணைந்து உழைத்திருக்கலாம்!
வேலை முடித்து அனைவரும் பின்புறம் உள்ள பழைய கிணற்றில் நீர் இறைத்து குளிப்போம் யார் கண்டது எங்களோடு கருப்பனும் இன்ன பிற நபர்கள் ஏன் சவரி கூட குளித்திருக்கலாம்!.
இன்றும் சென்றேன் அதே உணவகத்துக்கு! என் தட்டில் உள்ள இறைச்சி வெளியே விழுமா என் கருநிற,செந்நிற நாய்கள் சுற்றிவந்தது பஞ்சகாலத்தில் செங்கல்பட்டை நோக்கி சென்ற காப்டன் கண்ட வழியில் கிடந்த மனிதமலைகளின் குடல்களை கிழித்து நாய்கள் உண்ட நினைவை உண்டாக்கியது. உணவை அள்ளி வாயில் வைக்கும் போது இரண்டு பேர் பிச்சை கேட்டனர் அவர்கள் எப்போதும் கேட்பதுதான் இன்று அவர்கள் கேட்கும் போது சவரியையும் அவனது மனைவியையும் நினைவுப்படுத்தினர். எப்போதும் அலட்சியப்படுத்திவிட்டு உணவை தொடரும் நான் ஹேடனின் மனநிலையில் இருந்தேன் வாய்விட்டு அழமுடியாமல்
- See more at: http://solvanam.com/?p=29586#sthash.DH4GzaJx.dpuf

No comments:

Post a Comment